×

ஊட்டி பள்ளிக்கூடங்களில் ஓணம் பண்டிகை கோலாகலம்

ஊட்டி : ஓணம் பண்டிகையையொட்டி ஊட்டியில் பல்வேறு கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் அத்தப்பூ கோலமிட்டு விமரிசியாக கொண்டாடினர்.
கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை வெகு விமரிசியாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஓணம் பண்டிகையையொட்டி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், ஓணம் பண்டிகையை உறவினர்களுடன் கொண்டாடி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் ஏராளமான கேரள மாநில மக்கள் வசிக்கும் நிலையில், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அவர்களது வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டு மகாபலியை வரவேற்று வருகின்றனர். இதனையடுத்து, நேற்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கல்வி நிறுவனங்களில் ஓணம் பண்டிகை வெகு விமரிசியாக கொண்டாடப்பட்டது.
ஊட்டியில் உள்ள கிரசன்ட் கேசில் பள்ளியில் நடந்த விழாவில் மாணவர்கள் பிரமாண்ட அத்தப்பூ கோலமிட்டு மகாபலி அரசரை வரவேற்றனர்.

தொடர்ந்து நடன நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. இந்த விழாவில் பள்ளி தாளாளர் உமர் பாரூக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அதேபோல ஊட்டி அருகேயுள்ள எமரால்டு ஹைட்ஸ் கல்லூரி உட்பட பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஓணம் பண்டிகை வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது.

The post ஊட்டி பள்ளிக்கூடங்களில் ஓணம் பண்டிகை கோலாகலம் appeared first on Dinakaran.

Tags : Onam festival ,Ooty ,Attapoo Kolam ,Kerala ,Dinakaran ,
× RELATED ஊட்டி நகர் பகுதியில்...